கிறிஸ்தவம்…கிறிஸ்தவம்…கிறிஸ்தவம்…

Author: Voice Of God Ministry  //  Category: தமிழ்

ஜாதிகளைமிதிக்கும் மதம் கிறிஸ்தவம் – நல்ல
சகோதரம் வளர்க்கும் மதம் கிறிஸ்தவம்
பேதைகளைஞானியாக்கும் கிறிஸ்தவம் – கொடிய
ஏழைகளைஆதரிக்கும் கிறிஸ்தவம்

பிரிவினையைஒழிக்கும் மதம் கிறிஸ்தவம் – உன்னை
பரிவுடனேபார்க்கும் மதம் கிறிஸ்தவம்
பள்ளனோகள்ளனோபாமரனோபார்க்காமல் – தெய்வ
அர்ச்சகராய் ஆக்கிபார்க்கும் கிறிஸ்தவம்

புதியதொருஉடன்படிக்கைகிறிஸ்தவம் – ஒரே
பாத்திரத்தில் பருகவைக்கும் கிறிஸ்தவம்
மனிதநேயம் வளர்க்குமிந்தகிறிஸ்தவம் – மாறின்
மோட்சமில்லைஎன்றுசொல்லும் கிறிஸ்தவம்

பகைவனுக்குநன்மைசெய்யும் கிறிஸ்தவம் – கொடிய
பாவத்தையும் மன்னிக்கின்றகிறிஸ்தவம்
தீயவழிமாறச் செய்யும் கிறிஸ்தவம் – திருந்தும்
பாவியையேவாழவைக்கும் கிறிஸ்தவம்

பேதமின்றிவாழசொல்லும் கிறிஸ்தவம் – நாம்
பிறந்ததேதிசொல்லுமிந்தகிறிஸ்தவம்
மோட்சவழிகாட்டுகின்றகிறிஸ்தவம் – நீ
மோசம் போக கூடாதென்னும் கிறிஸ்தவம்

கிறுக்குத்தனம் பேசாதிந்தகிறிஸ்தவம் – யாரும்
இழிந்தகுலம் என்காதிந்தகிறிஸ்தவம்
எல்லோரும் சமம் என்னும் கிறிஸ்தவம் – ஜாதி
ஒழிவதற்குஒரே வழி கிறிஸ்தவம்

கொழுக்கஒருவன் விடாதிருக்கும் கிறிஸ்தவம் – உதவி
கொடுத்துஉள்ளம் மகிழுமிந்தகிறிஸ்தவம்
ஆதாயம் தேடாதிந்தகிறிஸ்தவம் – பிறனை
அடிமையாக்கநினைக்காதிந்தகிறிஸ்தவம்

கொடியநோயைநீக்குமிந்தகிறிஸ்தவம் – தீய
கொடியவினைமாற்றுமிந்தகிறிஸ்தவம்
வருத்தப்படும் யாவருக்கும் கிறிஸ்தவம் – தினம்
வருந்திஉன்னைஅழைக்குமிந்தகிறிஸ்தவம்

சபிப்பவரைஆசீர்வதிக்கும் கிறிஸ்தவம் – கொடும்
பாவிநம்மைமீட்கவந்தகிறிஸ்தவம்
தீயவர்க்கும் நன்மைசெய்யும் கிறிஸ்தவம் – தூய
பரிசுத்தத்தைபாரில் தந்தகிறிஸ்தவம்

பிரிந்துபிரிந்துபோகும் இந்தநாட்டிலே – தேசம்
பிரிந்திடாமல் காக்குமிந்தகிறிஸ்தவம்
கூவி கூவிஅழைக்குமின்பகிறிஸ்தவம் – உன்
குடும்பத்திலேஅமைதிதரும் கிறிஸ்தவம்

உள்ளங்கையில் வரைந்ததுன்னைகிறிஸ்தவம் – தூய
உள்ளன்போடுஆணியேற்றகிறிஸ்தவம்
நேசிப்பதாய் சொன்னதெனக்குகிறிஸ்தவம் – பாவி
எந்தனுக்காய் பழியானகிறிஸ்தவம்

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைகிறிஸ்தவம் – வீண்
வம்புசண்டைவெறுக்குமிந்தகிறிஸ்தவம்
நானேதெய்வம் என்றுசொன்னகிறிஸ்தவம் – வேறு
யாரும் சொல்லவில்லை இந்தகிறிஸ்தவம்

தூக்கஒருவன் துதிக்கஒருவன் இல்;லாமதம் கிறிஸ்தவம் -மேலே
ஆளஒருவன் அடிமையொருவன் இல்லாமதம் கிறிஸ்தவம்
சூத்திரங்கள் சாத்திரங்கள் இல்லாமதம் கிறிஸ்தவம் – துன்பம்
சூழ உன்னில் ஆத்திரமாய் வந்துகாக்கும் கிறிஸ்தவம்

கற்பனையில் வந்ததல்லகிறிஸ்தவம் – காலச்
சரித்திரத்தைதாங்கிவந்தகிறிஸ்தவம்
விற்பனைக்கு இல்லையிந்தகிறிஸ்தவம் – யாரும்
விருப்பமுடன் வந்துசேரகிறிஸ்தவம்

நல்லவர்கள் நாடிவரகிறிஸ்தவம் – பொல்லா
தீயவரைநடுங்கவைக்கும் கிறிஸ்தவம்
கொஞ்சம்பேர் உள்ளதுதான் கிறிஸ்தவம் – தெய்வ
விடுதலைக்கேவந்ததிந்தகிறிஸ்தவம்

இறைவனிடம் யாரும் செல்லகிறிஸ்தவம் – இடை
தரகரில்லாஒரேமதம் கிறிஸ்தவம
பட்சம் ஒன்றும் பார்க்காமதம் கிறிஸ்தவம் – பாவி
மோட்சம் செல்லஒரே வழி கிறிஸ்தவம்

******
COMPOSED BY
Bro. David Samuel

Tags:

Leave a Reply

You must be logged in to post a comment.